சிவனொலிபாதமலைக்கு சென்ற முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து!!

723

 
மஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலிருந்து சிவனொலிபாதமலைக்கு வியாபாராம் செய்ய குறித்த நபர் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற போதே முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.