வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு உணவு தயாரித்தவர் கைது!!

753

வவுனியாவில் பாடசாலைகளுக்கு போசாக்கு உணவுத் திட்டத்தில் கீழ் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறித்த போசாக்கு சத்துணவுத்திட்டத்தை பாடசாலை அதிபரின் அனுமதியுடன் சிலர் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொண்டு, வேறு இடத்தில் உணவுகளைத் தயாரித்து பாடசாலைகளுக்கு எடுத்துச் செல்கின்றார்கள்.

இவ்வாறு ஒருவர் மூன்று பாடசாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் உணவுகளை தயாரித்து வழங்கி வந்துள்ளார்.

இன்று காலை அப்பகுதிக்கு திடீரென்று சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் உணவு தயாரிக்கும் இடத்தினை பார்வையிட்ட போது சுகாதாரமற்ற முறைப்படி இருந்துள்ளதுடன் திறந்த வெளியில் உணவுகளை தயாரித்துள்ளதுடன் சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த நபரை கைது செய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது 5000 ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக சுகாதாரப் பரிசோதகர் கே.எஸ்.சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.