இவர்களது வயதைக் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்!!

1016

 
தைவானைச் சேர்ந்த மூன்று சகோதரிகள், தங்களது வயதை விட பாதியளவு இளமையாக இருப்பதால், இளமையான குடும்பம் என புகழாரம் சூட்டப்படுகின்றனர்.

தைவான் நாட்டைச் சேர்ந்தவர் Lure Hsu, 41 வயதாகும் இவர் Interior Designer ஆக பணிபுரிந்து வருகிறார், இவருக்கு, 40 மற்றும் 36 வயதில் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

விடயம் என்னவென்றால், இவர்கள் மூவருமே இருபது வயது தோற்றத்தில் இருப்பது தான். மேலும், இவர்களின் 63 தாயாரும் 30 வயது பெண்மணி போலவே உள்ளார். இதனால், இந்த குடும்பத்தை ‘The Family of Frozen Age’ என்று தைவான் ஊடகங்கள் அழைக்கின்றன.

தங்களின் தாய் சிறுவயதில் மிக இளமையாக இருந்ததாலும், அதன் காரணமாகவே தாங்களும் இளமையான தோற்றத்தில் தெரிவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து Lure Hsu கூறுகையில், ‘நாங்கள் எங்களது தாயை பார்த்து வளர்ந்து வந்ததால், இளமையான தோற்றத்தை நாங்கள் உணர்ந்ததில்லை. எங்கள் 74 வயது தந்தையும் இளமையான தோற்றத்தில் இருப்பார்.

ஆனால், அவர் எங்களை புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. ஆகையால், எங்களது புகைப்படங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறோம். எங்களது இளமைக்கு பிரத்யேகமாக, நாங்கள் எதுவும் செய்வதில்லை.

விரைவாக இரவு தூங்கிவிட்டு, அதிகாலையில் எழுந்து விடுவோம். பின்னர், ஒரு பெரிய தம்ளரில் வெதுவெதுப்பான நீரை பருகுவோம், ஒருபோதும் காலை உணவை தவிர்த்ததில்லை.

மேலும், குளிர்பானங்களை குடிக்க மாட்டோம். நேரத்துக்கு உணவை உட்கொண்டாலே உடல் எடை சீராக இருக்கும், இளமையும் அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

இவர்களை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரும், பேஸ்புக்கில் 3 லட்சத்து 41 ஆயிரம் பேரும் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.