சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு!!

806

Jaffna libraryஇலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் காணப்படும் நூலகங்களுக்கு இடையில் போட்டி நடத்தப்பட்டது.

அகில இலங்கை ரீதியாக சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தை நாவலப்பிட்டி நூலகமும், மூன்றாம் இடத்தை வாரியபொல நூலகமும் பெற்றுக் கொண்டுள்ளன.

மாநகரசபைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட நூலகப் போட்டியில் யாழ்ப்பாண நூலகத்திற்கு முதலாம் இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.