மனைவியின் ஆசையை நிறைவேற்ற 90 வயது முதியவர் மறுமணம்!!

563

marriageசவுதி அரேபியாவில் 90 வயது தந்தைக்கு அவரது பிள்ளைகள் மறுமணம் செய்து வைத்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் வசிப்பவர் பதிஸ் அல் தகாபி. இவருக்கு 90 வயது. நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவரது மனைவி சமீபத்தில் காலமானார்.

அவர் உயிரோடு இருந்த போதே கணவனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால் தகாபி மறுத்து விட்டார்.

தகாபிக்கு ஏழு மகன்களும், ஐந்து மகள்களும் உள்ளனர். தாயின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தந்தைக்கு இவர்கள் இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதற்காக குழந்தை இல்லாத 53 வயது விதவையை தேர்வு செய்து, தந்தைக்கு மணம் முடித்துள்ளனர். தந்தைக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலம் தாயின் கனவை நிறைவேற்றி விட்டதாக, ஐந்து மகள்களும் தெரிவித்துள்ளனர். இந்த திருமணத்தில், ஏராளமான உறவினர்கள் பங்கேற்றனர்.