கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் 11 மணி நேரத்தில் மூன்று மில்லியன் வருமானம்!!

537

kattuகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் மூலமாக 11 மணித்தியாலங்களில் அரசாங்கம் மூன்று மில்லியன் ரூபாவை வருமானமாக சம்பாதித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 .00 மணியிலிருந்து இன்று காலை 7.00 வரையான காலப்பகுதியில் இந்தத் தொகை வருமானமாக கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் இந்தப் பாதையால் 11,000 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவினால் நேற்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

25.8 கிலோ மீற்றர் நீளமுள்ள இந்த அதிவேகப் பாதை சீன அரசின் அனுசரணையோடு அமைக்கப்பட்டுள்ளது.