வவுனியா நெளுக்குளம் யங்பைட் விளையாட்டுக்கழகம் நடாத்தும் தீபாவளி விளையாட்டு திருவிழா 2013!!

585

988483_428342190597927_1469673788_nவவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் யங்பைட் விளையாட்டுக்கழகம் 12வது தடவையாக பெருமையுடன்  நடாத்தும் தீபாவளி விளையாட்டு திருவிழா 02.11.2013 அன்று யங்பைட் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய நிகழ்வுகளாக காலை 8:30க்கு வரவேற்பு நிகழ்வும், காலை 9 மணிக்கு சிறுவர் தினத்தை கொண்டாடும் முகமாக சிறுவர் நிகழ்ச்சிகளும், பிற்பகல் 1 மணிக்கு முதியோர் விழா சிறப்பு நிகழ்ச்சிகளும், பிற்பகல் 2.30 மணிக்கு யங்பைட் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளது.

இவ் இறுதிப்போட்டியில் யங்பைட் விளயட்டுக் கழகத்தினை எதிர்த்து அம்மன் விளையாட்டுக்கழகம் விளையாடவுள்ளது.

மாலை 7 மணிக்கு HI FI இசைக் குழுவினர் வழங்கும் இன்னிசை கச்சேரி நடைபெறவுள்ளது.
இவ் விழாவிற்கு சமர் ஹில் விநியோகஸ்தர்கள் கண்டி, வெங்கடேஸ்வரா சுப்பர் மார்க்கட் வவுனியா, டிண்டி மார்க்கட்டிங் ரத்மலான உடன் இணைந்து யங்பைட் விளையாட்டுக் கழகம் அனுசரணை வழங்குகின்றது.

இன் நிகழ்வுகள் அனைத்திற்கும் வவுனியா நெற் இணையம் ஊடக அனுசரணை வழங்குகின்றது.

இவ் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு யங்பைட் விளையாட்டுக்கழக ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுக்கின்றார்கள். மேலதிக தொடர்புகளுக்கு அசோக் 0770110637.

-பிரதீபன்-