தல, தளபதி இல்லாத நாடா : அஜித்துக்கு விஜய் ரசிகர்கள் வைத்த பனர்!!

278

ajithஅஜித்தின் ஆரம்பம்’ படம் வரும் தீபாவளிக்கு சரவெடியாக வெடிக்க உள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தியட்டர்களில் அஜீத் ரசிகர்கள் பனர் மற்றும் கொடிகளை வைத்து படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

தியட்டர்களில் அடுத்த ஒரு வாரத்திற்குண்டான காட்சிகள் அனைத்தும் ஹவுஸ் புல்லாகி விட்டன. இந்நிலையில் அஜித்தின் ஆரம்பம் படத்திற்கு விஜய் ரசிகர்கள் பனர் வைத்து கொண்டாடியுள்ளனர். மதுரையில் முக்கியமான வீதிகளில் இந்த பனர்களை வைத்துள்ளனர். இந்த பனர் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்த பனரில் அஜித்துக்கு விஜய் கைக்கடிகாரம் கட்டி விடுவது போன்ற படத்தை வைத்து சிங்கம் இல்லாத காடா.. தல, தளபதி இல்லாத நாடா என்ற வாசகத்தையும் இணைத்து அமைத்துள்ளனர்.

அஜித்தின் ஆரம்பம் படத்தை ஆதரித்து விஜய் ரசிகர்கள் வைத்துள்ள பனரால் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் விஜய் ரசிகர்களுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.