வெள்ள நீரில் தவறி விழுந்த நடிகர் சிரஞ்சீவி!!

494

siranjeeviஆந்திராவில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு 53 பேர் பலியாகினர்.

16 மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

வெள்ள நிவாரண பணிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நடிகரும் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி நேற்று கிழக்கு கோதவரி மாவட்டத்துக்கு சென்றார்.

காக்கிநாடா அருகேயுள்ள ஆஞ்சநேயா நகரை பார்வையிடுவதற்காக படகில் ஏறப்போன சிரஞ்சீவி கால் நழுவி வெள்ள நீரில் விழுந்தார். பதற்றமடைந்த அவரது பாதுகாவலர்கள் நீரில் குதித்து அவரை பாதுகாப்பாக கரையேற்றினார்கள்.

அங்கிருந்து நேராக அனபர்தி தொகுதி எம்.எல்.ஏ. சேஷா ரெட்டியின் வீட்டிற்கு சென்ற சிரஞ்சீவி சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றார்.