வவுனியா புதிய பேருந்து நிலை­யத்­தில் நுளம்­புப் பெருக்­கம்!!

644

வவு­னியா புதிய பேருந்து நிலை­யத்­தில் வடி­கா­ல­மைப்பு சீராக்கப்படாமையால் அந்­தப் பகு­தி­யில் மழை நீர் தேங்கியுள்ளதுடன் அதி­லி­ருந்து நுளம்பு பெருக்­க­மும் அதிகரித்துள்ளது என்று குற்றஞ்சாட்­டப்­ப­டு­கி­றது.

வவு­னி­யா­வில் புதி­தாக அமைக்­கப்­பட்டு திறந்து வைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யத்­தி­லேயே தற்போது பேருந்­து­கள் சேவை­யில் ஈடு­ப­டு­கின்­றன. புதிய பேருந்து நிலை­யத்­தின் முதன்மை வாயிலி­லுள்ள வடி­கால் அமைப்பு சீரா­ன­ மு­றை­யில் தண்­ணீர் வடிந்து செல்­வ­தற்கு ஏற்­ற­வ­கை­யில் காணப்­ப­ட­வில்லை.

இத­னால் அதில் தண்­ணீர் தேங்­கிக்­கா­ணப்­ப­டு­வ­து­டன் காலை மற்­றும் மாலை வேளை­க­ளில் நுளம்பு அப்­ப­கு­தி­யில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இது தொடர்­பாக சம்­மந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் கவ­னம் எடுத்து இவற்­றைச் சீர் செய்து பய­ணி­க­ளின் ஆரோக்­கி­யத்­துக்கு உதவ வேண்­டும் என்று குறித்த பேருந்து நிலை­யத்­துக்கு வந்து தினமும் போக்கு­வ­ரத்­தில் ஈடு­ப­டும் பய­னி­கள் வேண்­டு­கோள் விடுத்துள்ளனர்.