தமிழகத்தில் இலங்கை அகதி மாணவனுக்கு சரமாரி வெட்டு : விரல்கள் துண்டான பரிதாபம்!!

987

 
தமிழகத்தில் இலங்கை அகதி மாணவனை கத்தியால் வைத்து வெட்டிய இரண்டு மாணவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த அர்ஜுன் என்ற மாணவன் மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தன்னுடைய உறவினரான ஜெயலெட்சுமி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சுண்ணாம்பூரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவருடன் அர்ஜுனுக்கு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதை மனதில் வைத்திருந்த கார்த்திக் ராஜா, அரசுப் பொது தேர்வுக்காக அர்ஜூன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய நன்பர் சரவணன் என்பவரை அழைத்து வந்து அர்ஜுனிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்றியதால், கார்த்திக் ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆர்ஜூனின் தலை மற்றும் கைகளை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனால் அர்ஜுனின் இடது கையில் இருந்த இரண்டு விரல்கள் துண்டானது. அதுமட்டுமின்றி இரத்த வெள்ளத்தில் துடித்ததால் அவரை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் கார்த்திக் ராஜா மற்றும் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் மீதும், வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.