வவுனியாவில் நிர்க்கதியான மாவீரர்களின் தந்தை முதியோர் காப்பகத்தில் ஒப்படைப்பு!!

730

வவுனியாவில் கடந்த நான்கு நாட்களாக மாவீரர்களின் தந்தை ஒருவர் நிர்க்கதியான நிலையில் இருந்து இன்று பிற்பகல் முதியோர் காப்பகத்தின் அதிகாரிகளின் ஒத்துழைப்பினால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினரிடம் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் சென்ற இரண்டு மாவீரர்களின் தந்தை ஒருவர் தனக்கு உதவியளிக்க யாருமற்ற நிலையில் யாசகம் செய்ய முடியாத நிலையை அடுத்து தன்னை முதியோர் காப்பகத்தில் தங்கவைக்குமாறு கோரியுள்ளார்.

இதையடுத்து முதியோர் காப்பகத்தில் நிர்வாக ரீதியிலான சில பிரச்சினைகளை அடுத்து முதியோர் காப்பகத்தில் இணைத்துக்கொள்வதில் நடைமுறைச்சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்று வவுனியாவிலுள்ள உயர் அதிகாரிகளின் சிபார்சினையடுத்து இன்று பிற்பகல் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினரால் முதியோர் காப்பகம் ஒன்றில் மாவீர்களின் தந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு தினங்களாக விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று குறித்த வயோதிபரை காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.