வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லையில் இல­வச ஒட்­டு­றுப்பு அறுவைச் சிகிச்சை சேவை!!

552

vavuniya GHவவுனியா பொது வைத்தியசாலையில் இன்று 30ம் திகதி தொடக்கம் நவம்பர் 1ம் திகதி வரையில் மூன்று தினங்களுக்கு இலவச பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளதாக வைத்திய அத்தியட்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்திருக்கும் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் அல்வின் ஞானமணி தலைமையில் வவுனியா பொது வைத்தியசாலை மருத்துவர்களுடன் இணைந்து இந்த சிகிச்சை வழங்கப்படவுள்ளது.

இந்த மருத்துவ முகாமிற்கு லண்டனில் உள்ள இம்மானுவேல் கிறிஸ்தவ ஐக்கிய சபையும் , ஜெப ஆலய மிஷனும் இணைந்து அனுசரணை வழங்கியுள்ளன.

இம்முகாமில் தீக்காயம் ,மணிக்கட்டு, கைவிரல் சம்பந்தமான நோய்கள் ( மணிக்கட்டு மற்றும் கை அறுவை சிகிச்சை ) கோரமான வடுக்கள் , கால் சம்பந்தமான காயங்கள், துண்டிக்கப்பட்ட நரம்புகள் , நாள்பட்ட புண்கள் , பிறப்புக் கோளாறுகள், கை சம்பந்தமானவை, உலோகத் துண்டுகள், கண்ணாடித் துண்டுகள் என்பவற்றை உடலின் உட்பாகங்களில் இருந்து அகற்றுதல், மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.