சச்சின் மீது 199 கிலோ ரோஜா இதழ்கள் தூவ சிறப்பான ஏற்பாடுகள்!!

610

Sachin-Tendulkarகொல்கத்தாவில் சச்சின் தனது 199வது டெஸ்ட் போட்டியை விளையாடும் போது வியக்கத்தக்க வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள சச்சின் அடுத்த மாதம் நடக்கும் மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறார். இந்நிலையில் தனது 200வது டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் சச்சின்.

199வது டெஸ்ட் போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது நாள் அன்று பார்வையாளர்களுக்கு டெண்டுல்கரின் படம் போட்ட மாஸ்க் மற்றும் ப்ளக்கார்டுகள் வழங்கப்படும்.

1. முதல் நாளில் போட்டியைக் காணும் 65,000 பேர் மாஸ்குகளை போட்டு டெண்டுல்கரை வாழ்த்துவார்கள்.

2. மறுநாள் டெண்டுல்கரை புகழ்ந்து வாசகங்கள் அடங்கிய ப்ளக்கார்டுகளை பார்வையாளர்கள் பிடித்திருப்பார்கள்.

3. போட்டியின் மூன்றாவது நாள் அன்று ஈடன் கார்டனில் இருந்து 199 கொத்து பலூன்கள் பறக்கவிடப்படும். பலூன்களில் டெண்டுல்கரின் போட்டோவும், அவரை புகழ்ந்து எழுதிய வாசகங்களும் இருக்கும்.

4. நான்காவது நாள் அன்று பிரபலங்கள் டெண்டுல்கரை பற்றி எழுதியவைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படும்.

5. ஐந்தாவது நாளில் ஹெலிகாப்டர் மூலம் சச்சின் மீது 199 கிலோ ரோஜா இதழ்கள் தூவப்படும்.

பல தரப்பட்ட நேரங்களில் எடுக்கப்பட்ட சச்சினின் புகைப்படங்களை வைத்து ஈடன் கார்டன் அருகில் உள்ள இடத்தில் போட்டிகள் நடக்கும் 5 நாட்களும் கண்காட்சி நடத்தப்படும்.

ஈடன் கார்டன் போட்டிக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளில் சச்சினின் புகைப்படம் மற்றும் ஓட்டோகிராப் இருக்கும்.

முதல் நாள் போட்டிக்கான டிக்கெட்டில் கிரிக்கெட் விளையாடத் துவங்கிய சிறுவன் சச்சினின் புகைப்படம் இருக்கும்.

இரண்டாவது நாள் போட்டிக்கான டிக்கெட்டில் சச்சின் துடுப்பை உயர்த்தி பிடிக்கும் புகைப்படம் இருக்கும்.

மீதமுள்ள 3 நாட்களுக்கான டிக்கெட்டுகளில் சச்சின் விளையாடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருக்கும்.