இளம் பெண்ணை தேடி வந்த அதிர்ஷ்டம் : உரிய நேரத்தில் கிடைக்காததால் கண்ணீர் விட்டு அழுத பரிதாபம்!!

332

தமிழகத்தில் அருகே வீடு இருந்தும் கடிதத்தை உரிய நேரத்தில் கொடுக்காத தபால் துறையால், இளம் பெண் அரசு வேலையை இழந்துள்ளார்

கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருக்கு வித்யா என்ற மகள் உள்ளார்.

B.Sc முடித்துள்ள இவர் தமிழக நில அளவை பதிவேடுகள் துறையின் பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதனால் நீலகிரி கலெக்டர் அலுவலகத்திலிருந்து வித்யாவிற்கு நேர்முக தேர்விற்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இக்கடிதம் கடந்த 12-ஆம் திகதி அனுப்பப்பட்டு, மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகத்திற்கு கடந்த 14-ஆம் திகதி வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் 16-ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு வித்யாவுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தபால்துறையோ அந்த கடிதத்தை மார்ச் 16-ஆம் திகதி பிற்பகல் 01.40 மணிக்கு தான் வித்யாவிடம் கொடுத்துள்ளது.

கலெக்டர் அலுவலகத்திலிருந்து கடிதம் வந்துள்ளதால், மிகவும் மகிழ்ச்சியாக கடிதத்தை திறந்து பார்த்த போது அவர் அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

காலை 10.30 மணிக்கு அங்கு இருக்க வேண்டும். கடிதமோ 1.40 மணிக்கு கிடைத்துள்ளது என்று வருந்தியுள்ளார்.

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அரசு வேலைக்கான வாய்ப்பு இப்படி தபால் துறையினரின் அலட்சியத்தால் தவறிவிட்டதே, அதிர்ஷ்டம் என்னை தேடி வந்தும் இப்படியாகிவிட்டதே என்று கூறி, உரிய நேரத்தில் கடிதம் கிடைக்காததால், தனது அரசுப்பணி வாய்ப்பு பறிக்கப்பட்டதாக மேட்டுப்பாளையம் தலைமை தபால் துறை அதிகாரிகளிடம் வித்யா புகார் அளித்துள்ளார்.

மேலும் வித்யாவின் வீடு தபால் அலுவலகத்தின் அருகிலே தான் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.