வீட்டிலிருந்த கூரிய ஆயுதம் ஒன்றினால் கழுத்து வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.
மாவரல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாக்கதுவ பிரதேசத்தில் நேற்று மாலை இந்ந சம்பவம் குறித்து பதிவாகியுள்ளது. வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்நபரது மகன் தந்தையை கூரிய ஆயுதத்தினால் கழுத்தறுத்துள்ளார்.
இந்நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 62 வயதான ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மீதான பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான உயிரிழந்தவரின் மகன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.





