திருமணப் பரிசால் பறிபோன புதுமாப்பிள்ளையின் உயிர் : நீடிக்கும் மர்மம்!!

1296

ஒடிஷாவில் திருமண பரிசை திறந்தபோது குண்டு வெடித்ததில், மணமகன் மற்றும் அவரது பாட்டி ஆகிய இருவரும் உயிரிழந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை அந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்து தெரியவரவில்லை.

பிப்ரவரி 18ஆம் திகதியன்று சௌமியா ஷேகர் என்பவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு முடிந்த ஒருசில நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு ஒரு திருமண பரிசு வந்திருந்தது.

ராய்ப்பூரில் இருக்கும் ஷர்மா என்பவரால் அந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்துள்ளது.

அதனை திறந்தவுடனேயே குண்டு வெடித்துள்ளது, காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாஹூ மற்றும் அவரது பாட்டி ஜெமமணி சாஹூ ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

ரீமா தீக்காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். புதுப்பெண்ணாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்க வேண்டியவர், இன்று தனது சிதைந்துபோன வாழ்க்கை குறித்து கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்.

சம்பவம் நடைபெற்று 1 மாதம் ஆகியும், இதற்கு காரணமானவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

நாங்கள் மிகவும் சாதாரணமான மனிதர்கள். எங்களுக்கு எதிரிகள் யாருமில்லை. எனது மகளுக்கோ அல்லது மருமகனுக்கோ எதிரிகள் யாருமில்லை. இதை யார் செய்திருப்பார்கள் என்று என்னால் சந்தேகிக்க முடியவில்லை” என்று ரீமாவின் தந்தை கூறுகிறார்.

இதில் பயன்படுத்தப்பட்ட குண்டு எவ்வளவு நுட்பமானது என்பதை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

க்ருடு குண்டாக(Crude bomb) கருதப்படும் இது சணலினால் சுற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதுதான் வெடிப்பிற்கு பிறகு வெள்ளை நிற புகையை வெளியேற்றியிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

முன்னாள் காதலர்கள் எவராவது இதை செய்திருப்பார்களா? சொத்து பிரச்சனையின் காரணமாக இது நடந்திருக்குமா?

ஆறு வருடத்திற்கு முன்பு ரீமா பள்ளியில் படித்துக்கொண்டிருபோது தொந்தரவு செய்த சக மாணவருக்கு இதில் தொடர்பிருக்குமா? போன்ற பல்வேறு கோணங்களில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.