கொலை செய்யப்பட்ட காதலி : தாலி, பட்டுப்புடவையுடன் கதறும் காதலன்!!

1057

கடந்த வாரம் கேரளாவை அதிர வைத்த ஆணவக்கொலையால், காதலன் பிரிஜேஷ் பித்துப் பிடித்தவர் போல் இருக்கிறார் .

சாதி குறைந்த நபரை தனது மகள் ஆதிரா காதலித்துவிட்டாளே என தந்தை ராஜன், சற்றும் இரக்கமன்றி கத்தியால் குத்தி சாய்த்தார். தனது மகளின் காதலை எதிர்த்த ராஜனும் காதல் திருமணம் செய்துகொண்டவர் தான்.

கல்யாணக்கனவோடு இருந்த பிரிஜேஷின் கனவு கலைந்து, அவரது நிம்மதியும் போய்விட்து. திருமணக் கனவுடன் கிராமத்துக்கு வந்த பிரிஜேஷ், இப்போது செய்வதறியாது திரிகின்றார்.

காதல் மனைவிக்காக வாங்கிய தாலியையும், பட்டுப்புடவையையும் கட்டிக்கொண்டு கதறும் அவரைத் தேற்ற முடியாமல் நண்பர்கள் தவிக்கின்றனர். `

வீட்டிற்கு வரப்போகும் மருமகளை வரவேற்க காத்திருந்த மாமியாரும் ஒரு வார காலம் சாப்பிடாமல் கவலையில் இருக்கிறார்.

என்னைப் போன்ற நிலை இனி யாருக்கும் வரக் கூடாது. தாழ்ந்த சாதி என்றால் விரும்பியவரை திருமணம் செய்துகொள்ளக்கூட உரிமை இல்லையா? என உணர்ச்சி பொங்க கேள்வி எழுப்புகிறார்.