5G இணையத் தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரீட்சிப்பு!!

694

அதிவேகம் கொண்ட ஐந்தாம் தலைமுறை இணைய வலையமைப்பு தொடர்பில் அனைவரது எதிர்பார்ப்பும் திரும்பியுள்ளது.

இந்நிலையில் சாம்சுங் நிறுவனம் குறித்த தொழில்நுட்பம் தொடர்பில் முன்னோட்டப் பரிசோதனை ஒன்றினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

இப் பரிசோதனை KDDI எனும் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை சாம்சுங் நிறுவனம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.



இப் பரிசோதனையானது 30,000 பேரை கொள்ளக்கூடிய ஜப்பானிலுள்ள Okinawa Cellular ஸ்டேடியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தரவிறக்கம் மற்றும் 4K வீடியோ பிளே செய்தல் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.