அரியாலை வடமேற்கு வயோதிபர் சங்கத்தால் வைத்திய முகாம்!!

602

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு அரியாலை வடமேற்கு மூத்த பிரஜைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாமும் முதியோர் கௌரவிப்பும் யாழ். நல்லூர் ஆனந்த வித்தியாசாலையில் இடம்பெற்றன.

வைத்திய முகாம் காலை 9.00 மணிக்கு ஆரம்பம் ஆகி மதியம் 1.30 வரை இடம்பெற்றது. குழந்தை வைத்தியம், பொது வைத்தியம், கண் பரிசோதனை ஆகியன துறை சார்ந்த வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டன. கண் பரிசோதனையை தொடர்ந்து இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

வைத்திய கலாநிதிகளான அப்புத்துரை யோகராசா, ஜமுனாநந்தா, தர்மகுலசிங்கம் தேவேந்திரா, பகீரதன் ஆகியோர் முகாமில் பங்கேற்று நோயாளர்களை பார்வையிட்டார்கள்.

கண் பரிசோதனைக்கான அனுசரணையை ரெனி மூக்குக் கண்ணாடி நிறுவனம் வழங்கி இருந்தது. மூக்குக் கண்ணாடிகளை கொழும்பில் லயன்ஸ் கழகத்தை சேர்ந்த லயன்ஸ். சண்முகநாதன் சக்திகுமார் பெற்றுத்தந்து இருந்தார்.

200 இற்கும் அதிகமானோர் இம்முகாம் மூலம் பயன் பெற்றார்கள்.
4.30 மணிக்கு ஆரம்பமான மாலை நிகழ்வில் மூத்த பிரஜைகள் 20 பேர் கௌரவிக்கப்பட்டார்கள். இச்சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களில் மூவர் கலாபூஷணம் விருது வென்ற சாதனையாளர்கள். செ. பொன்னுத்துரை, கந்தையா இராசநாயகம், க. தவராசா ஆகியோரே இவர்கள்.

குடும்பத்துக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த 75 வயதுக்கு மேற்பட்ட 17 பேருக்கு பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு, பெறுமதியான நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

கௌரவிப்பு விழாவில் நல்லூர் பிரதேச செயலத்தை சேர்ந்த சமூக சேவைகள் உத்தியோகத்தர் க. கனகராசா, அரியாலை வடமேற்கு கிராம சேவையாளர் பு.தஜிதரன், சங்கத்தின் காப்பாளர் செ. ப.ஜீவானந்தம், ஆனந்தா வித்தியாசாலை அதிபர் சரவணமுத்து ரூபசிங்கம் ஆகியோர் பேராளர்களாகளாக கலந்து கொண்டு மூத்த பிரஜைகள் கௌரவித்தார்கள்.

சங்கத் தலைவர் அ.பாலச்சந்திரன் மற்றும் செயலாளர் கா. தில்லையம்பலம் ஆகியோர் அடங்கலாக நிர்வாகத்தினர் இந்நிகழ்வுகள் திறம்பட இடம்பெற ஏற்பாடுகள் அனைத்தையும் வெகுசிறப்பாக மேற்கொண்டு இருந்தார்கள்.

578065_10151668336925780_1888961468_n 995877_10151668338145780_1030990504_n (2) 1379233_10151668338110780_320110182_n (2) 1380608_10151668337000780_1963537948_n (2)