டெல்லியில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் இரு மடங்காக அதிகரிப்பு!!

835

abuseடெல்லியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாலியல் துஷ்பிரயோக குற்றங்கள் இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2012ம் ஆண்டில் 706 பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் 15ம் திகதி வரை எடுக்கப்பட்ட புள்ளி விபரப்படி 1330 பாலியல் பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதாவது 2013ம் ஆண்டு முடிவடைவதற்கு 2 மாதம் இருக்கும் நிலையில் 10 மாதத்தில் இரு மடங்கு பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன.

அதேபோல் மானபங்கம் சம்பவங்கள் 4 மடங்கு பெருகி விட்டதாக கூறப்படுகின்றது. 2012ல் 727 மானபங்க வழக்குகள் பதிவானது. 2013ல் 2,844 மானபங்க வழக்குகள் பதிவாகி உள்ளன.

பகிடிவதை சம்பவம் 2009ல் 238ம், இந்த ஆண்டு 793ம் இடம்பெற்றுள்ளன. கடத்தல் குற்றங்கள் 2009ல் 1655ம், இந்த ஆண்டு 2906ம் நடந்துள்ளன.

இதேபோல் டெல்லியில் கணவனால் மனைவி கொடுமைப்படுத்தப்பட்டமை தொடர்பாக 2009ம் ஆண்டு 1297 சம்பவங்களும், 2013ம் ஆண்டு 2487 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக 2009ம் ஆண்டு 6 வழக்குகள் பதிவானது. இந்த ஆண்டு 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக, டெல்லி மாநில அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா ஆஜராகி தாக்கல் செய்த மனுவில் இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.