கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்று குழந்தை திருட்டு : அதிர்ச்சி சம்பவம்!!

505

மெக்சிகோவில் கர்ப்பிணியான இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கழுத்தை நெரித்து கொலை செய்து பெண் ஒருவர் குழந்தையை பறித்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கொலை சம்பவம் தொடர்பாக அந்த பெண்மணி மற்றும் அவரது கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் 20 வயதேயான Jessica Gabriela என்ற இளம் பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு சமூக வலைதளம் வாயிலாக சிந்தியா ஃபாத்திமா என்ற பெண்மணி ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் பொலிசாருக்கு சிந்தியாவின் குடியிருப்பில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிட்டியுள்ளது.

இதனையடுத்து நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சம்பவத்தன்று ஜெஸ்ஸிகாவை தமது குடியிருப்புக்கு நிர்பந்தித்து அழைத்த சிந்தியா, பிறக்கவிருக்கும் குழந்தைக்கான உடைகள் தருவதாக கூறியுள்ளார்.

தோழமையாக பழகியதால் ஜெஸ்ஸிக்காவும் சிந்தியாவை நம்பி அவரது குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

ஜெஸ்ஸிக்காவை தமது குடியிருப்புக்கு வரவழைத்த சிந்தியா அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.

பின்னர் ஜெஸ்ஸிக்காவின் உடலை மறைவு செய்ய முயன்றும் முடியாது போகவே, அவர்களது குடியிருப்பில் ஒரு அறையிலேயே மறைவு செய்துள்ளனர்.

சிந்தியாவின் கணவர் நாட்டின் வேறு ஒரு பகுதியில் வேலை நிமித்தம் தங்கியிருந்து வருகிறார்.

இதனிடையே கர்ப்பமாக இருந்த சிந்தியாவுக்கு பிறந்த குழந்தை இறந்து போயுள்ளது. கணவரிடம் இதை மறைத்த சிந்தியா தமது தோழி ஜெஸ்ஸிக்காவின் குழந்தையை பறிக்க திட்டமிட்டு அவரை கொலையும் செய்துள்ளார்.

ஜெஸ்ஸிக்காவின் நட்பு கிட்டும் முன்னர் பலமுறை சமூக வலைதளத்தில் சிந்தியா கர்ப்பிணி பெண்களின் நட்பு கோரியுள்ளதும் பொலிஸ் விசாரணையில் தற்போது வெளிவந்துள்ளது.