இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுக்கூட்ட வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டம் நேற்று வவுனியா வைரவர் புளியங்குளத்தில் அமைந்துள்ள ICC கல்லூரியின் விரிவுரை மண்டபத்தில் இணைய ஊடகவியலாளர் சங்க முன்னால் தலைவர் ஜனகன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் இணைய ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் புதிதாக உள்வாங்கப்பட்ட ஊடகவியலாளர் மற்றும் இணைய ஊடக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், கடந்தகால செயற்பாடு தொடர்பாக முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் உரையாற்றிய பின் சட்டத்தரணிகள் தலைமையில் புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது நடத்தப்பட்டுள்ளது.
புதிய நிர்வாக சபையில் செயலாளராக அருள், தலைவராக பரராஜசிங்கம் கனேசியஸ், பொருளாளராக பாஸ்கரன் கதீசன், உபதலைவராக பாலநாதன் சதீசன், உப செயலாளராக பிரதீப்புடன் உறுப்பினர்களாக பொன்னுத்துரை அரவிந்தன் மற்றும் சசி என தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் போசகராக சிரேஷ்ட சட்டத்தரணிகளில் ஒருவரான அன்ரன் புனிதநாயகம் மற்றும் ஆலோசகர்களாக சட்டத்தரணிகளான திலீப்காந்தன், கீர்த்தனன் ஆகியோரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.