யாழில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!!

403

வடமராட்சி, வல்வெட்டித்துறை கடற்கரைப் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கம்பர்மலையைச் சேர்ந்த 76 வயதுடைய துரைசிங்கம் அருந்தவம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண்ணின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.



தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வீட்டில் வசித்துவந்த குறித்த வயோதிபப் பெண், நேற்றுக் காலை மகள் வீட்டை விட்டுவெளியில் சென்றுவிட்டு திரும்பிய போது தாயாரைக் காணவில்லையென தேடியுள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த வயோதிபப் பெண் இறந்த நிலையில் கடற்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.