ஐபிஎல் தொடக்க விழாவில் தமன்னாவின் 10 நிமிட நடனம் : சம்பளம் எவ்வளவு தெரியுமா?

887

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க விழாவில் நடனமாட நடிகை தமன்னாவுக்கு பேசப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று மும்பையில் ஆரம்பமாகியுள்ளது .

இந்தாண்டு தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், வருண் தவான் மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் நடனமாடினார்.

தமன்னா ஐபிஎல் துவக்க விழாவில் 10 நிமிடத்துக்கு நடனமாட சுமார் 50 லட்சம் வரை அவருக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இரண்டு மாதம் போட்டி தொடரில் விளையாடவுள்ள சில வீரர்களுக்கு கூட குறைந்தபட்ச சம்பளமாக 20 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் வெறும் 10 நிமிடத்தில் 50 லட்சத்தை தமன்னா சம்பாதித்துள்ளார்.