அஞ்சலி போன்ற நடிகையை செருப்பால் அடிப்போம் : ஜாக்குவார் தங்கம் ஆவேசம்!!

570

jacuvarபுதுமுக இயக்குனர் சஞ்சீவன் இயக்கும் புதிய படம் வலியுடன் ஒரு காதல். இப்படத்தில் புதுமுகங்கள் ராஜேஷ், கௌரி நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஓடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் கில்டு சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் ஜாக்குவார் தங்கம், இயக்குனர்கள் மனோஜ் குமார், சிலந்தி ஆதிராம், பி.டி.செல்வகுமார், மு.களஞ்சியம், உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய களஞ்சியம் சிறிய முதலீட்டில் உருவாகியுள்ள வலியுடன் ஒரு காதல் மாதிரி உருவான என்னுடைய படமான ஊர்சுற்றி புராணம் படத்தில் இருந்து நடிகை அஞ்சலி பாதியில் ஓடிவிட்டார்.

சினிமா திரையுலகில் நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களில் இதுகுறித்து நான் புகார் கொடுத்துவிட்டேன். ஆனால், யாரும் இதுகுறித்து விசாரிக்கவும் இல்லை எந்த நடவடிக்கையும் இல்லை.

தயாரிப்பாளர் ஒருவர் பலகோடி ரூபாய் போட்டு இதுமாதிரி சிறிய படங்களை எடுத்து படம் வெளிவரும் என்று நம்பிக்கையுடன் இருக்கும்போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை பேசி தீர்க்கத்தான் இதுமாதிரியான சங்கங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் தங்களது கடமைகளை செய்வதில்லை.

தமிழ் சினிமாவில் புதிய தயாரிப்பாளர்கள் வருவது அஞ்சலி மாதிரியான நடிகைகளால் கேள்விக்குறியாகி விடுகிறது. பின்னர் எப்படி சிறு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை நோக்கி வருவார்கள். இதற்கெல்லாம் சங்கங்களில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். எனது ஊர்சுற்றி புராணம் வெளிவர வேண்டும் என்று ஆவேசமாக பேசிவிட்டு அமர்ந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜாக்குவார் தங்கம் இனி அஞ்சலி மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் நடந்து கொண்டார் என்றால் அவரை செருப்பால் அடிக்கவும் தயங்கமாட்டோம் என்று பேசிவிட்டு அமர்ந்தார்.