வவு­னியாவில் தள­பாட வசதிகளற்ற பாட­சாலை : பெற்றோர் விசனம்!!

638

வவு­னியா மகா­றம்­பைக்­கு­ளம் திரு­ஞா­ன­சம்­பந்­தர் வித்தியாலயத்தில் 10, 11ஆம் தர மாண­வர்­க­ளுக்கான தளபாட வச­தி­கள் இல்­லா­மை­யால் கற்­றல் செயற்பாடுகளை மேற்­கொள்­வ­தில் பெரும் சவால்­களை எதிர்­கொள்­வ­தாக பாட­சாலை சமூ­கத்­தி­னர் மற்­றும் பெற்றோர்கள் விச­னம் தெரி­விக்­கின்­ற­னர். இது தொடர்பில் பாட­சா­லைச் சமூ­கத்­தி­னர் தெரிவிக்கையில்,

வவு­னியா தெற்கு கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட திருஞானசம்பந்தர் வித்­தி­யா­ல­யத்­தில் தரம் 10 மற்­றும் 11இல் 50 க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் கல்வி பயில்கின்றனர்.

இவர்­கள் முத­லாம் தர (ஆரம்ப வகுப்பு) மாணவர்களுக்குரிய சிறிய இருக்­கை­க­ளில் அமர்ந்திருந்தே தமது கற்­றல் செயற்­பா­டு­களை மேற்கொண்டு வரு­கின்­ற­னர்.

இத­னால் நீண்ட நேரம் அமர்ந்­தி­ருந்து கல்வி கற்­ப­தில் பல சிக்­கல்­களை எதிர்கொள்கின்­ற­னர். இது மாண­வர்­க­ளின் உள ரீதி­யான பல பிரச்­சி­னை­க­ளுக்­கும் வழிவகுத்துவிடும். .

இது தொடர்­பாக வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு நாம் பல தட­வை­கள் தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால் இன்­று ­வரை எமக்கான தள­பாட வச­தி­களை உரிய­வர்­கள் செய்து தரவில்லை.

எனவே சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் இந்­தப் பிரச்­சி­னையை உடனடியாக தீர்த்து மாணவர்க­ள­தும் பாடசாலையினதும் வளர்ச்­சிக்குக் கைகொ­டுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.