தமிழ்த்தாய் வாழ்த்தின் போது நடிகர் விஜய் எழுந்து நிற்கவில்லையா?

760

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் சங்கம் சார்பில் மௌனப்போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது நடிகர் விஜய் எழுந்துநிற்கவில்லை என்று கூறி வீடியோ ஒன்று வெளியானது. ஆனால், அது முற்றிலும் போலியான வீடியோ என தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

போராட்டத்தின் போது, நாசர் சார் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். அப்போது, எனது அருகில் அமர்ந்திருந்த விஜய் சாரும் என்னுடன் சேர்ந்து எழுந்து நின்று, தமிழ்தாய் வாழ்த்தை பாடினார் என டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, போராட்டத்தில் விஜய் முதல் ஆளாக கலந்துகொண்ட வீடியோவை அவரது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.