கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் உதயபுரம் மேற்கு பிரதேசத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 19 கிலோ 400 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.



