நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!!

539

SLநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20-20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள், இரண்டு 20- 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 10ம் திகதி அம்பாந்தோட்டவில் நடக்கிறது.

இதற்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டிக்கான அணியை மத்யூஸ் வழிநடத்துகிறார். தவிர சங்ககார, ஜெயவர்தன, மலிங்க உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

அறிமுக வீரராக சகலதுறை வீரர் ஆஷன் பிரியன்ஜனா தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிர இரண்டு ஆண்டுகளுக்குப்பின் தொடக்க வீரர் கருணாரத்னவுக்கு அணியில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் 20-20 அணி:

மத்யூஸ்(அணித்தலைவர்), டில்ஷான், கருணாரத்ன, குசல் பெரேரா, சங்ககார, ஜெயவர்தன, சண்டிமால், திரிமான்ன, திசாரா பெரேரா, குலசேகர, மலிங்க, லக்மல், ஹேரத், சேனநாயக, அஜந்த மெண்டிஸ், ஆஷன் பிரியன்ஜனா.