இந்திய கிரிக்கெட் வீரர்களின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணியை பொறுத்த வரையில் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு மட்டுமின்றி, விளம்பரத்திலும் நடிப்பதிலும் வருமானம் கொட்டுகிறது.
நிறைய விளம்பரங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி விளம்பரம் மூலம் அதிகம் சம்பாதிக்கிறார். தற்போது அந்த வரிசையில் இளம் வீரர் வீராட் கோலி இணைந்துள்ளார்.
ஆனால் இந்த பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் டெண்டுல்கர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அவரது சொத்து மதிப்பு 965 கோடி(160 மில்லியன் டொலர்) அவருக்கு அடுத்து 2வது இடத்தில் டோனி உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 350 கோடி ஆகும்.
அதற்கு அடுத்த நிலையில் யுவராஜ்சிங்(190 கோடி), ராகுல் டிராவிட்(126 கோடி), விராத் கோலி(ரூ. 95 கோடி) உள்ளனர்.





