அடையாளம் தெரியாதவர்களால் எரிக்கப்பட்டுள்ள மீனவரொருவரின் மீன்பிடி வள்ளம்!!

555

 

மட்டக்களப்பு – காத்தான்குடி, நாவற்குடாவில் இன்று அதிகாலை மீனவரொருவரின் மீன்பிடி வள்ளம் அடையாளம் தெரியாதவர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிது.

நாவற்குடா கங்காணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு பின்புறமான மட்டக்களப்பு வாவிப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவரின் மீன்பிடி வள்ளமே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வள்ளம் எரிப்பு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் பிரிவினரும் ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்னர்.