நடிகை அனுஷ்காவுக்கு 31 வயது ஆகிறது. முகத்திலும் முதிர்ச்சி தெரிகிறது. இதனால் இளம் நடிகர்கள் அவரை ஓரம் கட்டுகின்றனர். தமிழ், தெலுங்கில் தயாராகும் ருத்ரமாதேவி படத்தில் தற்போது நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் நடித்த இரண்டாம் உலகம் படமும் விரைவில் ரிலீசாக உள்ளது.
புதுபட வாய்ப்புகளை தவிர்க்கிறார். அனுஷ்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது. அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாக கூறப்படுகிறது.
ஆந்திர தொழில் அதிபர்கள் பலர் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்கள் ஜாதகங்களை வாங்கி பெற்றோர் பொருத்தம் பார்த்து வருகிறார்கள். அடுத்த வருடம் ஆரம்பத்தில் அனுஷ்காவுக்கு திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





