பேருந்து, ரயில் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!!

1195

தனியார் பேருந்து மற்றும் ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஆணைக்குழுவும் , இலங்கை மத்திய வங்கியும் Lanka Pay நிறுவனமும் ஒன்றிணைந்து இந்த அட்டையை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் மிகுதிப் பணத்தைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினையை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அட்டைகளைப் பயணிகள் கொள்வனவு செய்வதன் மூலம், பேருந்து அல்லது ரயில்களில் பயணிக்கும் பொழுது பயணக்கட்டணம் இந்த அட்டையில் இருந்து குறைத்துக்கொள்ளப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.