பஞ்சாபில் உள்ள கபூர்தலா சிறையில் இருக்கும் குற்றவாளிகள் அவர்களது மொபைலில் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சிறையில் இருக்கும் ஒருவர் சக குற்றவாளியை அடித்து, அதை வீடியோவும் பிடித்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கொலை வழக்கு உட்பட 31 வழக்குகளில் குற்றம் சாற்றப்பட்டு கபூர்தலா சிறையில் அடைக்கபட்டிருக்கும் சுக்கா கஹ்லோ என்னும் நபர் அவரது மொபைலில் சக கைதியை அடிப்பதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் அப்லோட் செய்துள்ளார்.
சிறையிலிருந்தவாரே இவர் செய்யும் இத்தகைய செயல்களை கண்டிக்க அனைவரும் அஞ்சுவதாக தெரிகிறது. தினமும் சிறையில் தனது பேஸ்புக் பக்கத்தை மாற்றியமைக்கும் இவரின் பக்கத்திற்கு இதுவரை 16,000 லைக்குகள் குவிந்துள்ளன.
சிறைக்கு வருகைப்புரியும் அமைச்சர்கள், சிறை கட்டிடங்கள் ஆகியவற்றின் புகைப்படங்களை இவர் அவரது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார்.
கபூர்தலா சிறையில் அடைக்கப்படுவதற்கு முன் சுக்கா கஹ்லோ அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்தார் என்பதும், பாஜக பிரமுகர் ஒருவது கொலை வழக்கில் இவர் முக்கிய குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.




