தங்கம் கடத்த முயன்ற இலங்கையர் கட்டுநாயக்கவில் கைது!!

598

goldசுமார் 25 லட்சம் பெறுமதியான 3 தங்கக் கம்பிகளை கடத்த முயற்சித்த இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணிக்கவிருந்த நிலையில் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

சந்தேகநபரின் பயண பையை சோதனையிட்ட போது தங்க கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நபருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ள அதேவேளை இந்த விடயம் குறித்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.