கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஒட்டிய பெண்ணுக்கு அபராதம்!!

675

Cecilia Abadieஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஒட்டிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செசிலியா அபாடி(Cecilia Abadie) என்ற அந்தப் பெண் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான வேகத்தில் காரை ஒட்டி வந்த போது தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் கூகுளின் அதி நவீன கண்ணாடியை அணிந்திருந்தது கண்டறியப்பட்டு அதற்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

கலிஃபோர்னியாவில் வாகனங்களை இயக்கு‌பவர் முன்னால் வீடியோதிரை இருப்பது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையிலேயே செசிலியா அபாடி(Cecilia Abadie)-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கூகுள் கண்ணாடி அணிந்து காரோட்டுவது குற்றமா என தன கூகுள் பக்கத்தில் கேட்டுள்ளார்.