வதந்தி கிளப்பி விடும் மனீஷாவின் நலம்விரும்பிகள்!!

509

Manisha Yadavமுன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர வேண்டும் என்பதற்காக மனீஷாவின் நலம்விரும்பிகள் வதந்திகளை கிளப்பு வருகின்றனராம்.

வழக்கு எண், ஆதலால் காதல் செய்வீர் படங்களை அடுத்து ஜன்னல் ஓரம், பட்டையகிளப்பு பாண்டியா படங்களில் நடித்து வருகிறார் மனீஷா.

இதற்கிடையே தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் மனீஷா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த செய்தியை அவசர அவசரமாக மறுத்தார் அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன்.

தற்போது தனுஷ் அநேகன், வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதனால் நான் ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறேன், இந்த வேலைகள் முடிந்த பிறகுதான் யாரை கதாநாயகியாக புக் பண்ணலாம் என்பது பற்றி முடிவெடுப்பேன் என்று தெரிவித்து விட்டார்.

நிலைமை இப்படியிருக்க எதற்காக மனீஷா பற்றி இப்படி செய்தி வெளியாக வேண்டும் என்று விசாரித்தபோது மனீஷாவின் நலம் விரும்பிகள்தான் அவரது வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி வதந்தி பரப்பி விட்டதாக தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மேல்தட்டு ஹீரோக்களுடன் இணைத்து செய்தி பரவினால் சீக்கிரம் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது அவர்களின் எண்ணமாம்.