எனது மகள் பற்றி வதந்தி பரப்புகின்றனர்: காவ்யா மாதவனின் தந்தை புகார்!!

2464

kaviya madhavanமலையாள நடிகை காவ்யா மாதவன் பற்றி தேவையில்லாமல் வதந்தி பரப்புவதாக அவரது தந்தை மாதவன் கூறியுள்ளார். காசி, என் மன வானில், சாது மிரண்டால் படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை காவ்யா மாதவன்.

இவருக்கும் நிஸ்சல் சந்திரா என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவருடன் குவைத்தில் குடியேறினார், ஆனால் அதே ஆண்டில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தனர். இதனையடுத்து கடந்த 2011ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்றவர் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

இந்நிலையில் கமெராமேன் சஞ்சய் மேனனை காவ்யா 2வது திருமணம் செய்ய உள்ளதாக கிசுகிசு பரவியது. மேலும் இருவரையும் இணைத்து இணையத்தளங்களில் புகைப்பட்டங்களும் வெளியானது

இதை காவ்யா மறுத்து வந்ததுடன் சஞ்சய் மேனன் யார் என்பதே எனக்கு தெரியாது என்று தெரிவித்திருந்தார்.

இதுபற்றி காவ்யாவின் தந்தை மாதவன் கூறுகையில் சஞ்சய் மேனன் என்பவர் தமிழ் படம் ஒன்றில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன். காவ்யாவை பற்றிய வதந்தியை அந்த நடிகரே பரவவிட்டிருப்பாரோ என்ற சந்தேகம் உள்ளது.

அடிப்படையில்லாமல் வெளிவரும் இதுபோன்ற வதந்தியால் காவ்யா மனம் உடைந்திருக்கிறார் என்றும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதே தகவலை காவ்யாவும் தன்னுடைய இணையத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.