நவம்பர் மாத ராசி பலன்கள் – மேஷம்!!

350

mesha

அனைவருக்காகவும் பாடுபடும் குணமுடைய வர்கள் நீங்கள். இந்த மாதம் பண வரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்துவதற்கு முன்பு ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. ராசியாதிபதியான செவ்வாய் 5ம் இடத்தில் சூரியனின் வீட்டில் சேர்ந்திருப்பது எந்தவொரு காரியத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்கத் தூண்டும்.

வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்தவொரு காரியமும் நடந்து முடியும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வேலை சம்மந்தமாக நிறைய அலைய வேண்டியது வரும்.

வரவேண்டிய கடன்கள் தாமதமாக வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டியிருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கலாம்.

வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். தம்பதியருக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்தக் காரியத்திலும் அவசர முடிவெடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த சொந்த வேலை முடியும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பார்கள். மாணவர்கள் வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

ஆசிரியர் சொல்படி கேட்டு நடப்பது நன்மையைத் தரும். சக மாணவர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்ப்பார்த்தபடி நல்ல வாய்ப்புகள் கிட்டும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். மருத்துவச் செலவுகள் குறையும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை அர்ச்சித்து வழிபடுவது பிரச்சனைகளை தீர்க்கும். காரியத் தடைகளும் நீங்கும்.

சந்திராஷ்டமம் : 5, 6 திகதிகளில். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும்.

சொல்ல வேண்டிய மந்திரம் : கந்த சஷ்டி கவசத்தைச் சொல்லி முருகனை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கும்.

சிறப்புப் பரிகாரம் : வில்வ இலையைப் பறித்து சிவனுக்கு பிரதோஷத்தன்று அர்ச்சனைக்குக் கொடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், வியாழன், வெள்ளி
தேய்பிறை : திங்கள், வியாழன், வெள்ளி.