வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் உறுப்பினர்களின் வரவேற்பும் முதல் அமர்வும்!!

594

வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் உறுப்பினர்களின் வரவேற்பும் முதல் அமர்வும் நேற்றைய தினம் (25.04.2018) காலை 9 மணியளவில் செட்டிகுளம் பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பித்து உறுப்பினர்கள் விருந்தினர்கள் அனைவருக்கும் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்று பிரதேச சபையில் நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக பகுதியில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தேசியக் கொடியினை சுதந்திர கட்சியின் அமைப்பாளர் வாசல, மாகாண கொடியினை ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, சபைக் கொடியினை தவிசாளர் அந்தோணி ஆகியோர் ஏற்றி வைத்தவுடனும் சமய தலைவர்களின் ஆசீர்வாத்த்துடனும் நிகழ்வுகள் ஆரம்பமாகின

இந்நிகழ்வில் ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் சுதந்திர கட்சியின் அமைப்பாளர் வாசல, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி, கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நெல்சன், அக்கட்சியின் சர்வதேச அமைப்பாளர்களில் ஒருவரான மலரவன் ஆகியோர் கெளரவிருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்

செட்டிகுளம் பிரதேச சபையை முதன்முறையாக சுதந்திர கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட ப.உதயராசா தலைமையிலான ஸ்ரீரெலோ கட்சி சபையை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.