காமெடி அவதாரம் எடுக்கும் சிம்பு!!

532

simbuசிம்பு நடிப்பில் உருவாகும் வாலு படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்ததையடுத்து தற்போது பாண்டிராஜ் இயக்கும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுவரை ஆக்ஷன், ரொமாண்டிக் ஹீரோவாக வலம்வந்த சிம்பு இந்த படத்தில் முதன்முறையாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கப் போகிறாராம். அதற்காக சிம்பு-சந்தானம் கூட்டணி போட்டிருக்கும் இந்த படத்தில் இப்போது இன்னொரு காமெடி நடிகரான சூரியையும் களமிறங்கியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சிம்புவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் படையெடுக்கின்றனராம். இதுவரை இல்லாத அளவுக்கு தன்னை பார்க்க இவ்வளவு ரசிகர்கள் கூடுவது சிம்புவை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதாம். அதே உற்சாகத்துடன் இந்த படத்திலும் நடித்து வருகிறாராம் சிம்பு.