தமிழகத்தில் இரண்டு நாட்களில் 26 பேர் படுகொலை!!

622

tnதமிழகத்தில் 2 நாளில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தீபாவளி காலத்தில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் கடந்த இரு நாட்களாக பல இடங்களில் கொலைச் சம்பவங்கள் நடந்தன.

சென்னை துரைபாக்கம், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தலா ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் முன் விரோதம் காரணமாக நடந்த மோதலில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் 3 பேர், நெல்லை, வேலூரில் தலா 2 பேர், தூத்துக்குடி,கோவை, கடலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தில் தலா ஒருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.