கனடா நாட்டின் மர்கம் நகரில் உள்ள வீதிக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
நேற்று ஆரம்பமான இவ்விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ், பொலிவுட் மற்றும் ஹொலிவுட் சாதனைகளை போற்றி புகழாரம் சூட்டப்பட்டது.
பின்னர், மர்கம் பகுதியில் உள்ள பிரதான வீதி ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்(அல்லாஹ் – ரக்ஹா ரஹ்மான்) தெரு என பெயர் சூட்டப்பட்டது.