பிரித்தானியாவில் இளம் தாயார் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்து வரலாற்று சாதனை படைத்திருந்தார்.
பிரித்தானியாவின் ரோதர்ஹாம் பகுதியில் குடியிருக்கும் கிறிஸ்டின் கிளார்க் என்பவரே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்து வரலாற்று சாதனை படைத்தார்.
உலகில் 70 மில்லியம் பேரில் ஒருவருக்கு மட்டுமே இதுபோன்ற வாய்ப்பு அமையும் என்பதால் கிறிஸ்டின் கிளார்க் வரலாற்றில் இடம்பிடித்தார். அதுமட்டுமின்றி ஒரே கருமுட்டையில் இருந்தே 4 பிள்ளைகளும் பிறந்துள்ளதும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
தற்போது அந்த 4 குழந்தைகளுக்கும் 5 வயதாகிறது. நான்கு பிள்ளைகளின் பிறந்த நாளையும் சமீபத்தில் கொண்டாடியுள்ள அவர்களது தந்தை ஜஸ்டின், நால்வரும் பிறந்த போது 9lb-கும் அதிகமாக எடை இருந்துள்ளனர்.
அதேபோன்றே அவர்களின் விருப்பங்களும் தனித்தனியாக உள்ளது என்றார். மட்டுமின்றி நால்வருக்கும் வேறு வேறு வண்ணங்களிலான துணிமணிகள் வைக்கும் அலமாரி இருந்தது.
ஆனால் தற்போது அவர்கள் தங்கள் உடைகளை தங்களுக்குள்ளே மாற்றி அணிந்து கொள்ளும் பக்குவத்திற்கு வந்துள்ளனர் என்றார் ஜஸ்டின்.
அவரவர் உடைகளை வேறுபடுத்துவது இயலாமல் போன நிலையிலேயே புத்திசாலித்தனமாக அவர்கள் நால்வரும் தங்களுக்குள்ளே உடைகளை மாற்றிக்கொண்டனர் என்றும் குறும்பாக சொல்கிறார் கிறிஸ்டின் கிளார்க்.
ஒருபோதும் நால்வருக்கும் ஒரே மாதிரியான உடைகளை அனிவித்தது இல்லை எனவும், அவரவர் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதையே ஊக்குவிப்பதாகவும் கிறிஸ்டின் கிளார்க் பெருமையுடம் தெரிவித்துள்ளார்.
குட்டி தேவதைகளான அலெக்சிஸ், எலிஷா, டார்சி மற்றும் கரோலின் ஆகிய நால்வரும் பிறக்கும் முன்னர் சுமார் பத்தாண்டு காலம் மகப்பேறுக்காக பல முயற்சிகளும் மேற்கொண்டதாக கூறும் கிறிஸ்டின்(41) மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
மொத்த நம்பிக்கையும் தொலைந்து இனி ஒருபோதும் எந்த முயற்சிக்கும் இல்லை என முடிவெடுத்த நிலையிலேயே IVF வாயிலாக முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் வியப்பளிக்கும் வகையில் முதல் முயற்சியிலேயே கிற்ஸ்டின் கருவுற்றுள்ளார். ஒரே ஒரு குழந்தைக்காக காத்திருந்த கிளார்க் தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் நால்வர் பிறந்ததும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லமல் போனது எனக் கூறும் கிளார்க், தனது நீண்ட தூர லொறி ஓட்டுனர் பணியை தமது மகள்களுக்காக துறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி தமது மகள்கள் நால்வரை மிகவும் கண்டிப்புடனும் அதே வேளையில் அவர்களின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து வளர்க்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.






