விரைவில் அரசியல் அறிவிப்பு : நடிகர் விஜய் ரசிகர்களுடன் திடீர் ஆலோசனை!!

557

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில் தற்போது ரசிகர்களை சந்தித்துள்ளது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகம் முழுவதும் அதற்கு நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். அவரின் ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை அருகே உள்ள பனையூரில் கடந்த 2 நாட்களாக ரசிகர்களை விஜய் திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இதனால் அரசியலுக்கு வரப்போவதற்கான அறிவிப்பை விஜய் வெளியிடுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இது வழக்கமான சந்திப்புதான் என்றும் வேறு திட்டம் எதுவும் இல்லை என்றும் ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது