வவுனியாவில் செஞ்சிலுவைச் சங்கத்தின் தாகசாந்திப் பந்தல்!!

773

 

வவுனியா மன்னார் வீதியில் செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் தாகசாந்தி பந்தல் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் 155வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக வவுனியா மாவட்ட செஞ்சிலுவை சங்கமானது இவ் ஏற்பாட்டை செய்து பொதுமக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் வேலைத் திட்டங்களை பரப்புரை செய்துவருகிறது.

செஞ்சிலுவை சங்கத்தினரின் தகாசாந்தி நிலையத்தில் பொது மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு குளிர்பானங்களை அருந்தியதை காணக்கூடியதாக இருந்தது.