இலங்கைக்கு எதிராக நிற்குமாறு நியூசிலாந்திற்கு மன்னிப்புச் சபை அழுத்தம்!!

657

amnestyஇலங்கையில் இம்மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டில் நியூசிலாந்து, இலங்கைக்கு எதிராக ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை இதனை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பான தூதுக்குழு மற்றும் மனு ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை நியூசிலாந்து பாராளுமன்றிற்கு இன்று அனுப்பியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மேற்கொண்டுள்ள மனித உரிமை மீறல்களை நியூசிலாந்து கணக்கிலெடுக்காது இருக்க முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபையின் பேச்சாளர் கிராண்ட் பெயில்டோன் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் போது பொதுநலவாய அமைப்பு தலைவர் பதவி இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்படுவதை நியூசிலாந்து எதிர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.