விபசார தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு பாடம் நடத்தும் சீனா!!

502

chinaவாடிக்கையாளரை கவர விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு சீன நிறுவனங்கள் பாடம் நடத்துகின்றன.

மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள சீனாவில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற விவரங்கள் நாம் அறிந்தவை.

ஆனால் அறியாத வெளியே தெரியாத பல விஷயங்கள் அங்கு உள்ளன. சீனாவில் சில பெண்கள் நிறுவனங்களை நடத்துகிறார்கள்.
அவர்களின் தொழில் என்ன தெரியுமா, பேஸ்புக் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து தங்கள் வசம் இழுப்பது எப்படி என விபசாரிகளுக்கு பாடம் கற்று கொடுக்கின்றனர்.

விபசார தொழிலில் ஈடுபடும் பெண்கள் வீதிகள் மற்றும் விடுதிகளில்தான் தங்களது வாடிக்கையாளர்களை பிடிப்பது வழக்கம். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தொழில் புரட்சி மற்றும் போட்டிக்கு ஈடு கொடுக்கும் வகையில் அவர்களுக்கு இதுபோன்று பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனங்களை பெண்கள்தான் ஆரம்பித்துள்ளனர். அங்கு விபசாரிகளை அழைத்து அவர்களின் தொழில் வளர்ச்சிக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி இலவசம் அல்ல.

இதற்காக விபசாரிகளிடம் இருந்து மிகப்பெரிய தொகை வசூலிக்கப்படுகிறது. இத்தொழில் சீனாவில் மறைமுகமாக கொடிகட்டி பறக்கிறது.