உடம்பை அழகாக வைத்திருப்பதே மகிழ்ச்சி : திரிஷா!!

647

Trishaதிரிஷா சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிறது. இன்னும் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஹன்சிகா, சமந்தா, டாப்சி, அமலாபால் உள்ளிட்ட இளம் நடிகைகள் வரத்து திரிஷா மார்க்கெட்டை சரிக்கவில்லை தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தமிழில் தற்போது ஜெயம் ரவி ஜோடியாக பூலோகம், ஜீவா ஜோடியாக என்றென்றும் புன்னகை படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் ரம்பா, ஊர்வசி மேனகா படங்களில் நடிக்கிறார். திரிஷா சினிமாவில் நிலைத்து இருப்பதற்கு அவரது கட்டுக்கோப்பான உடல்வாகுதான் காரணம் என்கின்றனர். சினிமாவுக்கு வந்த புதிதில் எப்படி தோன்றினாரோ அதே மாதிரி ஒல்லியாகவே இருக்கிறார். உடல் குண்டாகவில்லை.

இதுகுறித்து திரிஷா கூறும்போது, நான் அழகான தோற்றத்தில் உடம்பை கட்டுகோப்பாக வைத்து இருப்பது இனிமையாக உள்ளது. உடற்பயிற்சி செய்யாததால் தூங்க முடியாமல் பலர் இருக்கிறார்கள். அந்த பட்டியலில் நானும் சேர்வேன் என்று நினைக்கவில்லை என்றார்.